
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கடம்போடு வாழ்வு பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு வருவாய் புலனாய்வு துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓய்வு பெற்ற ராணுவ வீரரான அழகியநம்பி (44) என்பவர் மோட்டார்சைக்கிளில் அந்த வழியாக வந்தார். உடனே அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தனர். அப்போது அழகிய நம்பி யானை தந்தங்களை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனால் அழகிய நம்பியை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனையாடுத்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம்(53), சிவந்திபுரத்தை சேர்ந்தவீனஸ் ஆல்பர்ட்(45), அம்பையை சேர்ந்த கார்த்திக்(32) மற்றும் வள்ளியூரை சேர்ந்த நம்பிநாராயணன்(32) ஆகிய நான்கு பேர் உதவியுடன் அழகிய நம்பி யானை தந்தங்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனால் வனத்துறையினர் சம்மந்தப்பட்ட 5 பேரையும் கைது செய்தனர். இதனையடுத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள யானை தந்தங்கள் யானையின் பற்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் எடை 4.7 கிலோ ஆகும். அழகிய நம்பி உட்பட 5 பேரையும் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அவர்கள் யானை தந்தங்களையும் பற்களையும் விற்பனை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்தது.