
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிராயாக்ராஜ் பகுதியில் கடந்த மாதம் 13ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கிய நிலையில் வருகிற 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் இதுவரை புனித நீராடிய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் கூட புனித நீராடுகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ஆகியோரும் மகா கும்பமேளாவில் புனித நீராடினர்.
இதுவரையில் 40 கோடிக்கும் அதிகமானோர் திரிவேணி சங்கமத்தில் நீராடிய நிலையில் பலர் துறவரம் எடுக்கிறார்கள். இதுவரை ஏராளமான இளம் பெண்கள் துறவரம் பூண்டுள்ள நிலையில் உத்திரப்பிரதேச அரசு ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது இதுவரை 7000க்கும் மேற்பட்ட பெண்கள் துறவறம் எடுத்துள்ளனராம். அவர்கள் சனாதன தர்மத்திற்காக பாடுபடுவதாக உறுதி கூறியுள்ளனர். மேலும் இதில் ஏராளமான பெண்கள் உயர் கல்வி படித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.