
400 தொகுதிகளில் NDA கூட்டணி வென்று பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பிரதமர் மோடியின் புகழ் மற்றும் பெருமை பரவி உள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெல்லும் என பல்லடத்தில் நடைபெற்று வரும் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.