இந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான். இவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் அடிக்கடி விலங்குகள் தொடர்பான வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு சதுப்பு நில வயல்வெளிக்குள் சிக்கிய காண்டாமிருகத்தை வனத்துறையினர் மீட்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். சுமார் 700 கிலோ அந்த காண்டாமிருக குட்டி இருக்கும். அந்த குட்டியை வனத்துறையினர் குழுவாக சேர்ந்து மீட்டு பின்னர் ஒரு மரப்பலகையில் வைத்து அதனை தோளில் சுமந்து செல்கிறார்கள்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் இது ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்ட வீடியோ என்றும், சுமார் 600 முதல் 700 கிலோ உள்ள அந்த குட்டியை எங்கள் குழுவினர் தோளில் சுமந்து மீட்டனர் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் அவருடைய வீடியோ வைரலாகி வரும் நிலையில் வனவிலங்குகளை மீட்பதில் வனத்துறையினரின் அர்ப்பணிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள்.