ஆள் மாறாட்டம் செய்து 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகரை ஆவடி மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர்

சென்னை கிண்டி மடுவாங்கரை சேர்ந்த முகைதீன் பாத்திமா பீவி என்பவருக்கு கொரட்டூர் கிராமம் கள்ளிகுப்பம் பகுதியில் 2347 சதுர அடி நிலம் இருந்தது. அந்த நிலத்தை அபகரிக்க திட்டமிட்டு பாஜக பிரமுகர் பத்மநாபன் பாத்திமா பீவி போல் ஆள்மாறாட்டம் செய்து போலியாக பொது அதிகார பத்திரம் தயார் செய்துள்ளார். இதனையடுத்து அந்த நிலத்தை பாலகிருஷ்ணன், பிரபு, வேலு ஆகியோருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.

அந்த நிலத்தின் மதிப்பு 80 லட்ச ரூபாய் ஆகும். இது குறித்து அறிந்த முகைதீன் பாத்திமா பீவி ஆவடி மத்திய குற்ற பிரிவு போலீஸ் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி செங்குன்றம் மாலைநகரை சேர்ந்த பாஜக பிரமுகரான பத்மநாபன் என்பவரை கைது செய்தனர். இவர் சோழவரம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவராக இருந்தது விசாரணையில் தெரியவந்தது.