
தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் கடந்த மே 14ஆம் தேதி வெளியான நிலையில் இந்த தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூலை இரண்டாம் தேதி துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 2 -மொழிப்பாடம், ஜூலை 3- ஆங்கிலம், ஜூலை 4 – இயற்பியல், பொருளாதாரம், ஜூலை 5- கணினி, ஜூலை 6- தாவரவியல், வரலாறு, ஜூலை 8-கணிதம், வணிகவியல், ஜூலை 9 – வேதியியல் , கணக்கியல் தேர்வுகள் நடைபெற உள்ளது.