மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நாடே எதிர்பார்த்த 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி மந்திரி தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.

இந்திய பொருளாதாரம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. உலக நாடுகள் இந்தியா மீது வைத்துள்ள நம்பிக்கை கடந்த 10 வருடங்களில் அதிக அளவில் உயர்ந்துள்ளது.அதன் பிறகு கூட்டுறவுத்துறைகளை வலுப்படுத்தி அதன் கட்டமைப்புகளை வலுப்படுத்த உதவும் வகையில் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகங்களுக்கு போதிய அளவில் நிதி உதவி செய்யப்படும். அசாம் மாநிலத்தில் யூரியா உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் யூரியா பிளான்ட் அமைக்கப்படும்.

நாம்ரூப்பில் அமையும் இது 12.7 மெட்ரிக் டன் யூரியாவை உற்பத்தி செய்யும் என்றார். இதைத்தொடர்ந்து புதிதாக தொழில் தொடங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 10 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்றார. அதோடு சிறு குறு தொழில் உற்பத்தியை பெருக்க தேசிய உற்பத்தி இயக்கம் தொடங்கப்படும் என்றார். மேலும் பிற்படுத்தப்பட்ட எஸ்ணி மற்றும் எஸ்டி பிரிவினை பெண்களுக்கு தொழில் தொடங்க 2 கோடி வரை கடன் வழங்கப்படும் என்று அறிவித்தார்.