
பிரான்ஸ் நாட்டின் 15 வயது சிறுமி லினா, கடந்த ஆண்டு செப்டம்பரில் Saint-Blaise-La-Roche பகுதியில் இருந்து காணாமல்போனார். லினா, Strasbourg-ல் உள்ள தனது காதலனை சந்திக்க ரயிலுக்காக நடந்து சென்றபோது காணாமல் போனார். காலை 11.22 மணிக்கு, அவரது ஸ்மார்ட்போனில் உள்ள டிராக்கிங் சிக்னல் துண்டிக்கப்பட்டது, அதன் பிறகு அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து போலீசார் பல தரவுகளைச் சேகரித்த போது, அதே பகுதி Ford Puma கார் ஒன்று சென்றது தெரியவந்தது. அதன் GPS தரவுகளை ஆராய்ந்த போலீசார், அந்த கார் லினா காணாமல் போன இடத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து Nievre பகுதியில் தேடுதல் நடத்திய போது, கடந்த 16-ஆம் தேதி லினா உடல் நீரோடையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த காரின் உரிமையாளரான சாமுவேல் என்பவர் ஜூலை மாதமே தற்கொலை செய்து கொண்டார். அவர் இறக்கும் முன்பு ஒரு கடிதத்தில் நான் எனது கௌரவத்தை இழந்துவிட்டேன். எனது கண்ணியத்தையும், மனிதத் தன்மையையும் இழந்துவிட்டேன். நான் போகத்தான் வேண்டும். என்னை எப்படி கட்டுப்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை. எல்லாம் வேகமாக நடக்கிறது என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். லினா கொல்லப்பட்டது எப்படி என்பதை அறிவதற்காக பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.