
திருவள்ளூர் மாவட்டம் மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதுடைய வெற்றிவேல் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வெற்றிவேல் தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு தெரு நாய் வெற்றி வேலை கடித்து குதறியது. இதனால் முகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் வெறி நாயை துரத்தி அடித்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் குழந்தையின் சிகிச்சைக்கு 4 லட்சம் ரூபாய் வரை பணம் செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலி வேலை பார்க்கும் பழனிவேலால் 4 லட்சம் ரூபாய் வரை பணத்தை புரட்ட முடியாது. இதனால் என்ன செய்வது என்று அறியாமல் உள்ளனர்.