
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் வேலைக்கு சென்று கொண்டே படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டு அவர்கள் பட்ட கஷ்டங்களை தெரிவித்தனர். அதில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாணவன் ஒருவன் தனது கஷ்டத்தை கூற அது சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்த அரை மணி நேரத்தில் அந்த மாணவனின் வீட்டு முகவரி தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளால் கண்டறியப்பட்டு வீட்டிற்கு தேவையான சில பொருட்கள் வாங்கித் தரப்பட்டன.
அந்த மாணவன் தனது தாய்க்கு மிகுந்த ஆசையுடன் வாங்கி தர நினைத்த பொருள் மெத்தை. அதையும் அவர்கள் வாங்கி கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தளபதி விஜய் அவர்களே நேரடியாக மாணவனின் பெற்றோர் வங்கி கணக்கில் ரூ 25 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளார். அதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதை ஏற்றும் விழா நடைபெற உள்ளது. அதற்கு நீங்கள் வரவேண்டும் என கட்சியின் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். அந்த மாணவனையே தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்ற வைத்து நிர்வாகிகள் அழகு பார்த்து உள்ளனர் இது குறித்து மாணவனின் தாய் பேசும் போது, தனது மகன் கொடியேற்றிய நிகழ்வை மிகவும் நெகிழ்ச்சியாக பகிர்ந்து பேசி உள்ளார். அந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி Direct-அ Bank Account-ல ₹ 25 ஆயிரம் போட்டாரு
கட்சியில் முத்த தலைவர்கள் இருந்த போதும்,TVK Flag மகனை எத்த வெச்சாங்க,அந்த தாயின் முகத்தில் சந்தோஷத்தை பாருங்க @tvkvijayhq 🥹💎
— TD….❥ (@MiniiGirl__) August 26, 2024