
திமுக மாநாட்டில் பேசிய TKS இளங்கோவன், 80 ஆண்டு காலம் திராவிட இயக்க சமுதாயத்தை தூக்கிப்பிடித்த, அறிவாசன் தந்தை பெரியார் தமிழ்நாட்டை வழி நடத்துவதற்கு முன்பு… திராவிட இயக்க முன்னோடிகளை பட்டியலிடுவது என்னுடைய நோக்கம்… அந்த சூழ்நிலையில் தான் இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டில்…..
இதோ நடேசனார் என் பட்டியலில் முதலிடம். 1912 ஆம் ஆண்டு சென்னை திராவிட சங்கத்தை தோற்றுவித்தவர். திராவிடர் இல்லத்தை தோற்றுவித்து… நம் வீட்டுப் பிள்ளைகள், ஏழை – எளிய மாணவர்கள் சென்னையில் தங்கி படிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கியவர்.
அவர் வாழ்ந்த காலத்தில் தான், முற்றிலும் நம் கொள்கைக்கு விரோதமான அன்னிபெசன்ட் அம்மையார்…. அந்த அன்னிபெசன்ட் அம்மையார் இந்திய மயமாக்குதல் என்ற பெயரில், இந்தி மயமாக்குதல், பிராமின மயமாக்குதல் என்ற சூழலை உருவாக்கிய பொழுது….. அதோ நடேசனார் பிராமணர் அல்லாத ஒற்றுமையை உருவாக்கிய பெருமை நரேசனாரை சாரும்.
குடியரசு எழுதியது… நடேசனார் நலிந்தார் என்று சொல்லுகிற பொழுது…. ஆயிரம் ஆயிரம் நடேசனார் அவர்கள் உருவாகட்டும் என்று எழுதியது…. வணக்கத்திற்குரிய மாண்புமிகு உதயநிதி அவர்களே….. இதோ இலட்சோப லட்சம் சின்ன நடேசநார்களை…. இளைய நடேசனாகளை உருவாக்கிய பெருமை மாண்புமிகு உதயநிதி அவர்களை சாரும்….
பிடி.தியாகராயர் பட்டியலில் இரண்டாவது… தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை தொடங்கியவர். பேரறிஞர் அண்ணா சொல்லுகிறார்…. வாடிய பயிருக்கு கிடைத்த மழைத்துளி, அழுத்த உடல் மீது வீசும் இனிய தென்றல்… கொடுமையான காசத்தை கருவருக்கின்ற மருந்து… தேய்ந்து கிடக்கிற திராவிடத்தை தூக்கி நிறுத்தியவர் என்று அண்ணாவால் பாராட்டுப்படுகிற பி.டி தியாகராயர்.
இதோ உட்கார்ந்து இருக்கிற கழகத்தினுடைய பொதுச் செயலாளர் நாங்கள் மாணவர்களாக இருக்கும்போது சொல்வார்களே…. பிராமினர் அல்லாதவருக்கான கொள்கை பிரகடனத்தை வெளியிட்டவர் பிடி தியாகராயர்… டாக்டர் மாதவ நாயர், கண்ணின் மணிகளே அறிவு ஜீவியாக இருந்தவர்… திராவிட சமுதாயம் ஏன் விழுந்தது ? என்ன காரணம் ?
முன்னேறுவதற்கான என்ன வழி ? உரையாற்றிய தம்பிமார்கள் சொன்னார்களே… ஜஸ்டிஸ் இதழின் உடைய ஆசிரியர்… அது மட்டுமல்ல, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் சீர்திருத்தம் பற்றி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசி, டைம்ஸ் பாராட்டியது… கார்டியன் இதழ் பாராட்டியது. பெருமைக்குரிய மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்ததை பற்றி பேசினார்.
நீதி கட்சியினுடைய லட்சியங்களுக்கு எல்லாம் நாடாளுமன்றத்திலே ஒரு குழு அமைத்ததற்கு அடித்தளமாக விளங்கியவர் தான் டாக்டர் தரவட்டு மாதவன் நாயர் . நான்காவது பனகல் அரசர் அவரை போற்றாமல் இருக்க முடியாது பனகல் கிராமத்தில் இருந்தாலும் சுப்பராய ரெட்டியாரிடம் இருந்து ஆட்சியை பெற்று, தொடர்ந்து வழி நடத்திய பனகல் அரசர் அவர்கள்….
என் கண்ணின் மணிகளே…. இன்றைக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை வரலாற்று ரீதியாக ஆதி திராவிடர் என்று அழைக்கிறோமே, நூறாண்டுகளுக்கு முன்பு அப்படி அழைக்க முடியாது. மன்னிக்க வேண்டும் அந்த வார்த்தைகளை சொல்லுவதற்கு, பஞ்சமர்கள் என்றும், பறையர்கள் என்றும் சொல்லப்பட்டதை பனகல் அரசர் 1925 ஆம் ஆண்டு சட்டம் போட்டு தூக்கி எறிந்து பெருமை மூத்த முன்னோடி படகல் அரசரை சாரும். அதுமட்டுமா ? டாக்டராக வேண்டும். டாக்டர் ஆக வேண்டும் என்றால் சமஸ்கிருதம் படிக்க வேண்டும். அப்படி சமஸ்கிருதம் படித்தால் தான் டாக்டராகலாம் என்ற சட்டத்தை தூக்கி போட்டு உடைத்தவர் பனகல் அரசர் அவர்கள்..
பட்டியலில் ஐந்தாவதாக பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியனார். பாண்டி மண்டலத்தின் உடைய தளபதி…. மூத்த முன்னோடி… நிறைய செய்திகள் இருக்கிறது. வணக்கத்திற்குரிய மாண்புமிகு உதயநிதி அவர்களே…. 30 ஆண்டு முன்பு கோவை மாநாட்டிலே பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியனாரின் படம் திறக்கின்ற வாய்ப்பினை மாண்புமிகு தலைவர் அண்ணன்….
இன்றைய முதல்வர்…. அன்றைய இளைஞர் அணி செயலாளர்… அண்ணன் பொன்முடிக்கு தொலைபேசியின் மூலமாக சொல்லி, இந்த வாய்ப்பை உன் சகோதரனுக்கு, நண்பனுக்கு தருகிறேன் என்று சொன்னார்களே… பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியனார். யார் அவர் ? 1929 பிப்ரவரி மாதம் 17, 18 மறக்க முடியுமா ? அந்த தேதிகளை….
செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாடு. அந்த மாநாட்டுக்கு தலைமை தாங்குவதற்கு அழைப்பது யார் தெரியுமா ? பெரியார் முன்மொழிகிறார்…. யாரை முன்மொழிகிறார் ? பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியனார் அவர்களை சுயமரியாதை மாநாட்டுக்கு தலைமை ஏற்க…. ஒரே ஒரு வரி சொல்கிறேன்…. அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய அருமையான உரை இருக்கிறது. எண்ணி பாருங்கள்….
80 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் வாட்டர்லூ புரட்சி பற்றி …. ஈடன் காலேஜில் தோன்றிய புரட்சியை பற்றி பேசிய பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியனார் ஒன்றைச் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். பல்வேறு மாவட்டங்களில் பேருந்துகளில் ஏறுகிற பொழுது, அந்த பயண சீட்டிலே தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது என்று பேருந்துகளிலே பயணம் செய்ய முடியாத சூழ்நிலை இருந்தது. அவர்களை சட்டப்படி சட்டத்தின் முன்னால் நிறுத்தி.. உரிமத்தை ரத்து செய்து, அவர்களுக்கு தண்டனையும் பெற்று தந்த பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியனார்…
டாக்டர் ஆற்காடு ராமசாமி முதலியார் ஒரே ஒரு செய்தி அவரைப் பற்றி… பெரிய அறிஞர், வட்டமேசை மாநாட்டிலே உரையாற்றியவர்… அவரை என்ன செய்தார்கள் என்று தெரியுமா ? சர்தார் வல்லபாய் படேல் ரகசியமாக ஒரு கடிதம் எழுதி அனுப்புகிறார். ஆற்காடு ராமசாமி முதலியாருக்கு கடிதம் எழுதி அனுப்பி, நீங்கள் கவர்னர் ஆகிறீர்களா ? அதற்கு ஒப்பு கொள்கிறீர்களா ? என்று கேட்டு வல்லபாய் படேல் கடிதம் எழுதுகிறார்.
கண்ணின் மணிகளே… நூறாண்டுகளுக்கு முன்பே இந்த கவர்னர் பதவியால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று ராமசாமி முதலியார் அவர்கள் அதை தூக்கி எறிந்த பெருமை திராவிட இயக்கத்தின் முன்னோடியை சாரும்.
பட்டியலிலே ஏழாவது இடம்… சவேடு பன்னீர்செல்வம் இன்னைக்கு திருவையாறு கல்லூரி இருக்கிறதே…. அந்த கல்லூரியிலே சமஸ்கிருதத்தில் தான் சொல்லித் தர வேண்டும் என்று சொன்னார்கள். கேட்டால், சரபோஜி மன்னர் பட்டயம் எழுதி தந்து இருக்கிறான், சமஸ்கிருதத்திலே சொல்லி இருக்கின்றார்கள் என்றார்கள்.
சவேடு பன்னீர்செல்வம் அந்த பட்டயத்தை எடுத்துக்கொண்டு போய் திருப்பாதிரி புலியூரில் இருக்கக்கூடிய ஞானியாரிடத்திலேயே காட்டி இதிலே என்ன எழுதி இருக்கிறது என்று கேட்க…. அவர்கள் சொன்னார். இதிலே கல்வி நலனுக்கென்று தான் எழுதி இருக்கிறது. சமஸ்கிருதம் என்ற வார்த்தை இல்லை என்று சொல்ல அதற்கு பிறகு தான் திருவையாறு கல்லூரியிலே அங்கே தமிழ் கற்பிக்க தொடங்கினார்கள்.
மூன்று தமிழன்னையை பற்றி இரண்டே நிமிடத்தில் பேசி உரையை முடிக்கிறேன். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, டாக்டர் தர்மாம்பாள்…. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சமஸ்கிருதம் படித்தார். சமஸ்கிருத மந்திரங்களை எல்லாம் திருமணங்களிலே எடுத்துச் சொன்னார். திராவிட சமுதாயம் எப்படி இழிவுபடுத்தப்படுகிறது என்று இன்றைக்கு என்னுடைய தங்கை அருள்மொழி,
திருமண நிகழ்விலே பேச அழைத்தால், சமஸ்கிருத மந்திரத்தை சொல்லி… அதன் அர்த்தத்தை சொல்லுவார்களே… அப்படி 80 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருதத்தை படித்து, சுயமரியாத திருமணங்களிலே பேசிய மதிபெற்ற மைனர் என்ற நூலை எழுதி, அந்த நூலின் மூலமாக தேவதாசி ஒழிப்புச் சட்டத்திற்கு அடித்தளமாக விளங்கியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
இந்தியாவின் முதல் பெண் டாக்டர்.. முதல் சட்டமன்ற உறுப்பினர்…. இறுதியாக மூவலூர் இராமாமிர்த அம்மையார் தொடங்கி, டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், டாக்டர் தர்மாம்பாள் வேலை கேட்டு வரக்கூடிய பெண்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி தந்து, அவர்களுக்கு சாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்த பெருமைக்குரிய அம்மையார். இந்த மூன்று தமிழன்னையோடு சேத்து, இந்த 10 பேரை பட்டியலிட்டு இருக்கிறேன். நிறைய பேச வேண்டும் என்று ஆசை இருக்கிறது என தெரிவித்தார்.