
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு விமர்சங்களை முன்வைத்து, அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகி அதிமுகவில் இணைந்த சிடிஆர். நிர்மல்குமார் ஆளும் திமுக அரசின் குறைகளை தொடர்ந்து ட்விட்டர் மூலம் விமர்சித்து வருகின்றார். இந்நிலையில் அவர் பதிவிட்டுள்ள ட்விட் பதிவில்,
அட்டக்கத்தி விடியா திமுக ஆட்சியின் 2 வருட அவலங்கள் :
1) #சுகாதாரத்துறை – ஒன்றரை வயது குழந்தைக்கு வலது கை அகற்றம்
2) #பொதுப்பணித்துறை – மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தை அலட்சியம் செய்யும் கர்நாடகா
3) #மின்சாரத்துறை – மின்சார கட்டணம் உயர்வு
4) #பள்ளிக்கல்வித்துறை – ஆசிரியர் பணியில் காலி இடங்கள் நிரப்பப்படாத நிலை.
5) #உயர்கல்வித்துறை – பொறியியல் கவுன்சிலிங் முதல் பேராசிரியர் நியமனம் என அனைத்திலும் குழப்பம்
6) #பால்வளத்துறை – வெளி மாநில நிறுவனங்களுடன் போட்டி போட முடியாத சூழல்
7) #நகர்ப்புறவளர்ச்சித்துறை – சொத்து வரி உயர்வு ,குடிநீர் வரி உயர்வு , கழிவுநீர் வரி உயர்வு
8) #விளையாட்டுத்துறை – சுமார் 4,000 மாணவ, மாணவிகள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத அவலம்
9) #மதுவிலக்கு மற்றும் #ஆயத்தீர்வைத்துறை – மக்கள் கள்ளச்சாராயம் அருந்தி பலியானதாக நினைத்திருந்த நிலையில் விஷ சாராயம் அருந்தியதால் 22 பேர் பலி
10) #பதிவுத்துறை – முத்திரைத்தாள் கட்டணம் 10 மடங்கு உயர்வு.
11) #கூட்டுறவுத்துறை மற்றும் #வறுமைஒழிப்புதிட்டங்கள் – அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தக்காளி கிலோ 100 ரூபாய் பருப்பு விலைகள் கடுமையா உயர்வு.
12) #வேளாண்மை – #உழவர்நலத்துறை – விவசாயிகள் விளைவித்த நெல் மூட்டைகளுக்கு அதிக கமிஷன் நெல் மூட்டைகள் மழையில் நனையும் அவலம்.
13) #உணவுப்பொருள்வழங்கல்துறை – தரமற்ற பொங்கல் பரிசு மெல்டிங் வெல்லம் புழு பூத்த அரிசி
14) #போக்குவரத்துத்துறை – வழித்தடங்களில் பேருந்துகள் குறைப்பு இலவச பேருந்துகளில் செல்லும் மகளிர்க்கு மரியாதையின்மை.
15) #தொழில்துறை – முதலீடுகளை ஈர்க்க சுற்றுப்பயணம் செல்வது மட்டுமே முதலீடுகள் வந்த பாடு இல்லை.
16)#தொழிலாளர்நலன்–#திறன்மேம்பாட்டுத்துறை – தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
17) #ஆதிதிராவிடர்நலத்துறை – பிளாஸ்டிக் சேர் பிரிவு என பதிவிட்டுள்ளார்.
அட்டக்கத்தி விடியா திமுக ஆட்சியின் 2 வருட அவலங்கள் :
1) #சுகாதாரத்துறை – ஒன்றரை வயது குழந்தைக்கு வலது கை அகற்றம்
2) #பொதுப்பணித்துறை – மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தை அலட்சியம் செய்யும் கர்நாடகா
3) #மின்சாரத்துறை – மின்சார கட்டணம் உயர்வு
4) #பள்ளிக்கல்வித்துறை – ஆசிரியர்…
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) July 3, 2023