
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டம் ஒழுங்கு இதெல்லாம் கவனிக்கிறாங்களா….. ஸ்டாலின் வீட்டுக்கு பார்த்தீங்கன்னா 400 போலீஸ்… அவருக்கு ஒரு கான்வாய். உதயநிதிக்கு ஒரு கான்வாய். உதயநிதி வீட்டுக்கு போலீஸ். இந்த மாதிரி எல்லா காவலர்களும் அவங்க குடும்பத்துக்கு மட்டும் பாதுகாப்புண்ணா… எப்படி ஒரு திருடனை பிடிக்க முடியும் ? எப்படி ரவுடியை பிடிக்க முடியும் ? எப்படி தப்பு செய்யுறவன புடிக்க முடியும் ?
முழுக்க முழுக்க அரசு இயந்திரம் பார்த்தீங்கன்னா… ரெண்டு விஷயத்துக்கு பயன்படுகிறது. ஒன்னு எதிர் காட்சிகளை ஒடுக்கணும். இன்னொரு பார்த்தீங்கன்னா… பந்தோபஸ்த் என்ற பெயரில் போற ரூட் எல்லாம் கான்வாய் போட்டு, போலீசை நிறுத்தி வச்சி இருக்கு. இந்த மாதிரி இருந்தா…
எப்படி காவலர்கள் வேலை செய்ய முடியும். காவலர்கள் சுதந்திரமா வேலை செய்ய முடியாது. விளைவுகளை தான் சந்திக்கணும். தமிழ்நாட்டுல பாத்தீங்கன்னா…. சட்டம் – ஒழுங்கு மிக மிக சீர்குலைவா இருக்கு. 1ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதிக்குள்ள பார்த்தீங்கன்னா…. 25 கொலைகள் நடந்திருக்கு.
தமிழ்நாடு ஒரு போதை மாநிலமாக உருவாகியிருக்கு. ஜோலார்பேட்டையை மையமாக வைத்து ஆளும் கட்சி சார்ந்த பிரமுகர் துனையோட சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் கடத்தல் கடத்தப்படுபவது, வெட்ட வெளிச்சமா தெரியுது . அதே மாதிரி செங்கல்பட்டு மாவட்டம்… போலீஸ் துப்பாக்கியோட போறாங்க.பெட்ரோல் வெடிகுண்டு கலாச்சாரம், துப்பாக்கி கலாச்சாரம், எல்லாமே சர்வசாதாரணமாக திமுக ஆட்சியில தலையை தூக்கிடுச்சு.
செங்கல்பட்டு மாவட்டதுல பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் இருக்குது. இங்கே கொலைகள் அதிகமாகுது, ரவுடிகள் நடமாட்டம் அதிகமாகுது. பெரிய அளவுக்கு சமூக பிரச்சனை இருக்கும் சூழலில், அதை நாம் முழுமையா அடக்கி, தொழிலுக்கு பாதுகாப்பு தருவோம், பொதுமக்களுக்கு பாதுகாப்பு தருவோம், உயிருக்கும் – உடைமைக்கு உத்தரவாதம் தருவோம் என்ற எண்ணமுமே இந்த அரசுக்கு கிடையாது. மாறாக எதை பற்றியும் கவலைப்படாத, ஒரு விடியாத அரசு தமிழ்நாட்டில்… ஒரு பொம்மை அரசாங்கம்… ஒரு பொம்மை முதலமைச்சர் என்றால் ? ஸ்டாலின் அவர்கள் தான் என விமர்சனம் செய்தார்.