
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கக்கூடிய நிலையில் திமுக – பாஜக இடையே கருத்து தோதல்கள் தொடர்ச்சியாக அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. நேரடியாக அரசியலாக்குதலும், விவாத பொருளாகி இருக்கிறது. அந்த வகையில் இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
பாஜக தனது மீதான குற்றச்சாட்டு ஊழல் உள்ளிட்டவற்றை மறைக்கவே ”சனாதன தர்மம்” உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்னெடுத்து, திசை திருப்பி வருவதாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,
1. பிஜிஆர் எரிசக்தி மோசடி
2. ஊட்டச்சத்து கிட் மோசடி
3. டிரான்ஸ்பார்மர் சப்ளை மோசடி
4. CMRL மோசடி
5. ETL இன்ஃப்ரா ஸ்கேம்
6. போக்குவரத்து மோசடி
7. நோபல் ஸ்டீல்ஸ் ஊழல்
8. TNMSC ஊழல்
9. HR&CE ஸ்கேம் & பல
உள்ளிட்ட பல்வேறு மோசடிகளை சுட்டிக்காட்டி இதற்கு தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பதில் என்ன ? அவர்களுடைய பதிலுக்காக நாங்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறோம். உங்களது அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கக் கூடிய செந்தில் பாலாஜி உள்ளிட்ட 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு என்பது நிலுவையில் இருக்கிறது. ஒரு அமைச்சர் தற்போது நீதிமன்ற உத்தரவு காரணமாக சிறையில் இருக்கிறார். ஆனாலும் அமைச்சரவையில் இருந்து அவரை நீங்கள் ஏன் நீக்காமல் இருக்கிறீர்கள் ?
இப்படிப்பட்ட நிலையில் உங்களுடைய மகனாக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் தற்போது ”சனாதான தர்மம்” என்று ஒரு விஷயத்தை பேசி இதனை திசை திருப்ப அவரும் முன்னெடுத்து வருகிறார். இதனால் உங்களுடைய பதிலுக்காக நாங்கள் தற்போது காத்திருக்கிறோம். உங்களின் மோசடி மற்றும் உங்களது அமைச்சரவையே இருக்க கூடிய அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான பதிலை எங்களுக்கு தாருங்கள் என அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.
Thiru @mkstalin, to begin with, we still wait for your answers on
1. BGR Energy Scam
2. Nutrition Kit Scam
3. Transformer Supply Scam
4. CMRL Scam
5. ETL Infra Scam
6. Transport Scam
7. Noble Steels Scam
8. TNMSC Scam
9. HR&CE Scam & many more11 of your sitting ministers… https://t.co/b2P5gq53BR
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) September 13, 2023