கேரளா கண்ணூரில் ஷிவாம்ஸ்(4) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். இவருக்கு ஒரு காரின் லோகோவை பார்த்து அதன் பெயரை சொல்லக்கூடிய திறமை இருக்கிறது. இவர் தனது 3 வயதில் இருந்து காரின் மீது உள்ள ஆசையால் இந்த திறமையை வளர்த்திருக்கிறார்.

இந்நிலையில் சிறுவன் ஷிவாம்ஸ் ஒரே நேரத்தில் 200 கால்களின் லோகோவை பார்த்து அதன் பெயர்களை கூறி உலக சாதனை பெற்றிருக்கிறார். சிறுவனுடைய சாதனை நிகழ்ச்சி திருபானந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது. இவர் 33 வினாடியில் 50 கார்களின் பெயர்களையும், 1.57 நிமிடத்தில் 110 காரின் பெயர்களையும் அதன் லோகோவை பார்த்து கூறியுள்ளார். அந்த சிறுவனுக்கு “டைம் வேர்ல்ட் ரெகார்டஸ்” என்ற உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.