
மத்திய ஆப்பிரிக்கா நாடான காங்கோ நகரில் சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு ஆண் கைதிகள் மட்டுமின்றி பெண் கைதிகளும் அடக்கப்படுகின்றனர். இந்தச் சிறையில் 3000 பேர் அடைப்பதற்கான வசதிகள் உள்ளனர். ஆனால் அந்த சிறையில் 17000 மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்குள்ள கைதிகளுக்கு இடையே மோதல்கள், பாலியல் அத்துமீறல்கள் ஆகியவை அரங்கேறுகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதிகள் தப்பி ஓட முயன்றனர். இதனால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அந்த துப்பாக்கி சூட்டில் மொத்தம் 129 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது பெண் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்த பகுதிக்குள் ஆண் கைதிகள் அத்துமீறி நுழைந்தார்கள். இதனால் ஏராளமான பெண் கைதிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள். அதாவது அந்தச் சிறையில் 348 பெண்கள் அடைக்கப்பட்டிருந்தன, அதில் 268 பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதிலும் குறிப்பாக 17 பேர் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் ஆவர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கைதி ஒருவர் கூறியதாவது, தன்னை ஒரே சமயத்தில் 12 பேர் கூட்டு பாலியல் வழக்கரம் செய்ததாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து ஐநா அமைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.