இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்ட பொருள்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்படுவது வழக்கம். அதிலிருந்து கிடைக்கும் நிதியின் ஒரு பகுதி ராணுவ வீரர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் நலனுக்காக வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் நேற்று பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 6-வது முறையாக இந்த ஏலம் விடப்பட்டது.

இதில் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட 600-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இடம் பெற்றுள்ளது. இந்த ஏலம் அடுத்த மாதம் 2-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், இதில் பங்கேற்க விரும்புவர்கள் https://pmmementos.gov.in/ இந்த இணையதளம் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.