
இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லா அமைப்பின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பு எந்தெந்த நிலைகளில் உள்ளது என்பதை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அடுத்த கட்டமாக ஹிஸ்புல்லா அமைப்பின் நிதி கட்டமைப்பு எங்கு உள்ளது என்பதை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இவ்வாறு ஹிஸ்புல்லா அமைப்பின் நிதி நிறுவனத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்ட இஸ்ரேல் ராணுவம் தற்போது பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு சொந்தமான மிகப்பெரிய நிதி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்துள்ளது. ஆனால் இந்த இடத்தை இஸ்ரேல் ராணுவம் தாக்கவில்லை.
ஏனெனில் பெய்ரூட்டின் இதயம் என சொல்லக்கூடிய அல்-ஹசல் மருத்துவமனைக்கு கீழே அமைந்துள்ளது. இதனை ஹசன் நசர்லாவின் பதுங்கு குழி என குறிப்பிடுவர். இந்தப் பதுங்கு குழியில் 500 மில்லியன் அமெரிக்க டாலர் (4201 கோடி ரூபாய்) நிதி உள்ளது என்பதை கண்டறியப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய நிதி லெபனான் மறு சிறு அமைப்புக்காக பயன்படுத்தப்படலாம் என இஸ்ரேல் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பிற்கு தொடர்புள்ள 30 இடங்களை இஸ்ரேல் ராணுவம் தாக்கியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதலால் இஸ்ரேலின் வடக்கு பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர் அவர்களை மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்துவது இஸ்ரேல் ராணுவத்தின் கொள்கையாகும்.