
ரஷ்யாவின் அலெக்சாண்டர் என்பவர் 48 கொலைகளை செய்ததாக உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 11 கொலைகளை செய்ததாக ஒப்புக்கொள்கிறேன் என கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . அதாவது தனது 18 வயதில் முதல் கொலையை தொடங்கிய இவர் 33 வயதில் ஒரு சில்லறை கடையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது கைது செய்யப்பட்டார்.
கடந்த 1992 முதல் 2006 வரை இவர் முதியவர்கள், குடிநெறி இல்லாதவர்கள் மற்றும் வீதிகளில் வாழும் மக்கள் ஆகியோரை குறி வைத்து கொலை செய்துள்ளார். இவரின் பெரும்பாலாக மாஸ்கோவின் தெற்கு பகுதியில் உள்ள பூங்காவை சுற்றி கொலை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 18 வருடங்களாக ரஷ்யாவின் அர்க்டிக் பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் தான் சிறுவயதில் இருந்தே வீட்டிலும், பூங்காவிலும் செஸ் விளையாடுவதில் நேரத்தை கழிப்பதாக கூறிய இவர் 64 செல் கொண்ட செஸ் போர்டில் ஒவ்வொரு செல்லிலும் ஒரு நாணயத்தை வைக்க வேண்டும் என்பதே தனது இலக்காகும் என்று காவல்துறையினரிடம் கூறியிருந்தார். அதன்படி 63 பேரை கொன்றதாக இவர் கூறினாலும் வழக்கறிஞர்கள் 48 கொலைகளையும், 3 கொலை முயற்சிகளையும் மட்டுமே நிரூபித்துள்ளனர். தற்போது மேலும் 11 கொலைகளுக்கு இவர் ஒப்புதல் அளிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இந்த செய்தி உண்மையாக இருந்தால் அந்த எண்ணிக்கை 59 ஆக உயரும். இதனால் அவர் ரஷ்யாவின் 2-வது மிகப்பெரிய தொடர் கொலைகாரன் என்று கருதப்படுகிறார்