10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், நடிகர் தனுஷ் இளைய மகன் லிங்கா 500க்கு 460 மதிப்பெண்கள் எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் 88, ஆங்கிலத்தில் 90, கணிதத்தில் 96, அறிவியலில் 99, சமூக அறிவியலில் 87 என மொத்தம் 460 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் முதல் குரூப் சயின்ஸ் குரூப் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.