
ஜூலை இரண்டாம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் ஹால் டிக்கெட் வருகின்ற ஜூன் 24ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறை தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.