தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பொது தேர்வு நடந்து முடிந்த நிலையில் பொது தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு வருகின்ற ஜூலை 2ம் தேதி துணைத்தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வை எழுதுவதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் ஜூன் 24 இன்று வெளியிடப்படுகிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில், www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தேர்வர்கள் மற்றும் தனி தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.