
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் 1164 அரசு பள்ளி மாணவர்கள் 100க்கு 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு வருகின்ற ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி அடையாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்கள் தங்களுடைய பள்ளிகளில் வருகின்ற மே 16ஆம் தேதி முதல் இதற்காக விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.