
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்காத மற்றும் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக கடந்த ஜூன் 27ஆம் தேதி முதல் துணைத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 26 ஆம் தேதி https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
தற்போது பத்தாம் வகுப்பு துணைத் தேர்வின் மறு கூட்டல் முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதாவது வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.