2023-24 ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வு முடிவுகாளானது கடந்த மே 10ஆம் தேதி வெளியானது. அதன் பின்னர், தேர்வு முடிவுகள் மீது மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்த மாணவர்களுக்கான முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதற்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை அறியலாம். இதனிடையே, இந்தப் பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.