திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராமத்தில் சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் வனப்பகுதியில் தொட்டில் கட்டி கர்ப்பிணி பெண்ணை அழைத்து வந்தனர். 11 மணிக்கு தொட்டில் கட்டி தூக்கி பிற்பகல் 3 மணிக்கு திருமூர்த்தி மலைக்கு வந்து சேர்ந்தனர்.

அதன் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி பெண் உடுமலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சாலை வசதி இல்லாததால் மலை கிராம மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அரசு இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.