அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரி சென்னை சேர்ந்த வித்யா குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் விதித்துள்ளது.

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர  விரும்புகிறாரா என்பதை கேட்டு தெரிவிக்க கூறியிருந்தோம். ஆனால் அதனை முறையாக பின்பற்றவில்லை. அதற்கு கண்டனத்தை பதிவு செய்கிறோம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.