பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவருடைய கோரையில் கைமாறிய பணம் குறித்தும், கொலையில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது குறித்தும் பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் 11 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

மேலும், குற்றவாளிகள் 10 நாட்கள் கொலை செய்யபட்ட ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டு, கொலை செய்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே சம்பவம் நடந்த இடத்திற்கு  வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு, ராமு (எ) வினோத்தின் வங்கி பரிவர்த்தனைகளும் ஆய்வு செய்யப்படுகிறது.