
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்நாடு கிராம வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியின் 40-வது ஆண்டு விழாவில் வங்கியின் முதல் வாடிக்கையாளரான உலகநாதன் என்பவரை வங்கி ஊழியர்கள் கௌரவித்தனர். விழாவின் போது உலகநாதன் கேக் வெட்டியுள்ளார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு உலகநாதன் 10 ரூபாய் செலுத்தி அந்த வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளார். 40-வது ஆண்டு விழாவில் வங்கி நிர்வாகத்தினர் உலகநாதனை கௌரவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.