பொதுமக்கள் மத்தியில் பத்து ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக புதுச்சேரியில் உள்ள உணவகம் ஒன்று புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி பத்து ரூபாய் நாணயத்தை கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரியாணி பிரியர்கள் பத்து ரூபாய் நாணயத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சிக்கன் பிரியாணியை வாங்கி சென்றனர். உணவகத்தின் இந்த நூதன ஐடியாவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.