சென்னை ஓட்டேரி ஸ்ட்ரான்ஸ் சாலையில் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையின் மேற்பார்வையாளர் சரவணன். இவர் நேற்று முன்தினம் ஒருவருக்கு மது கொடுத்தார். அப்போது அவர் குவாட்டருக்கு 10 ரூபாய் கூடுதலாக கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மதுப்பிரியர் எதற்காக கூடுதல் பணம் கேட்கிறீர்கள் என்று தகராறு செய்ததோடு அங்கிருந்த ஸ்வைப்பிங் மெஷினையும் எடுத்துச் சென்றுள்ளார்.

இதை சரவணன் கவனிக்காத நிலையில் வேறொரு வாடிக்கையாளரிடம் பணம் வாங்குவதற்காக ஸ்வைப்பிங் மிஷினை தேடி உள்ளார். அப்போதுதான் அது காணாமல் போனது தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக சரவணன் கொடுத்த புகாரின் பேரில் ஓட்டேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.