சமீபகாலமாகவே சிறுவர் சிறுமிகள் பலரும் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி தற்போது மத்திய பிரதேசம் உம்ரி கிராமத்தில் சாஹிர் என்ற பத்து வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 21ஆம் தேதி இரவு அந்த சிறுவனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அவரை முதலில் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் அதன் பிறகு அங்கிருந்து குவாலியரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. அப்போது செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டார். சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.