பட்டய கணக்காளர் தேர்வு எழுதுவதற்கும், அதில் தேர்ச்சி பெறுவதற்கும் கடினமான உழைப்பு தேவை என பலரும் கூறிகின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு பெண் பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதாவது டெல்லியில் பிரஜாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர்  தந்தை டீ விற்பனை செய்பவர். இவருடைய மகள் அமிதா.  இவர் படிப்பதறகு  குடும்பத்தார் பலரும்  எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை பொருட்படுத்தாத அமிதா 10 வருடங்களாக இந்த தேர்வுக்கு பயற்சியெடுத்து வந்த நிலையில் தற்போது அவர்  தேர்ச்சி பெற்றுள்ளார்.  பின்பு இதுபற்றி அவர் தன்  தந்தையிடம் ஆனந்த கண்ணீருடன் கட்டி அணைத்து தான் தேர்வில் வெற்றி பெற்றதை கூறினார்.  மேலும்  இது தொடர்பான  வீடியோ  சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.