
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்கலில் கலந்து கொண்ட நிலையில் அதன் பின்னர் கடுமையான போராட்டத்திற்கு பிறகு வெள்ளி திரையில் அறிமுகமாகி தனக்கென தனிமுத்திரையை பதித்துள்ளார். மெரினா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பல படங்களில் நடித்த நிலையில் டான் மற்றும் டாக்டர் போன்ற திரைப்படங்கள் அவருடைய நடிப்பில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது.
இதைத்தொடர்ந்து தன்னுடைய 25ஆவது படத்தில் சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் முன்னதாக விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரியும் போது ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவிடம் உங்களைப் போன்று நானும் இன்னும்10 வருடங்களில் ஆகி விடுவேன் என்று கூறுகிறார் சிவகார்த்திகேயன். அதாவது சூர்யாவை போன்று தனக்கும் சிக்ஸ் பேக்ஸ் இருக்கும் என்ற விதத்தில் அவர் கூறினார். அவர் கூறியபடியே தற்போது அமரன் திரைப்படத்தில் சிக்ஸ் பேக்ஸ் உடன் சிவகார்த்திகேயன் காணப்பட்டார். மேலும் இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி சொன்னதை செய்து காட்டிவிட்டால் சிவகார்த்திகேயன் என்று கூறுகிறார்கள்.
transformation ft. @Siva_Kartikeyan.🗿#SK pic.twitter.com/GZpm6yay3g
— Mask (@Mask_official_) December 14, 2024