கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் லோகநாயகி. இவருக்கு 70 வயது ஆகிறது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு லோகநாயகி தனது தெரிந்த ஒருவருக்கு 10,000 ரூபாய் பணத்தை கடனாக கொடுத்துள்ளார்.

ஆனால் பணம் வாங்கியவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் லோக நாயகியை அலைக்கழித்துள்ளார். மேலும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து லோகநாயகி நெய்வேலி நகர காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் உதவி ஆய்வாளர் முத்து கிருஷ்ணனிடம் புகார் அளித்துள்ளார். உடனே முத்துகிருஷ்ணன் சம்பந்தப்பட்டவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்தார்.

பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி 10,000 ரூபாய் பணத்தை வாங்கி லோகநாயகியிடம் கொடுத்துள்ளார். தனது பணத்தை வாங்கி கொடுத்த உதவி ஆய்வாளருக்கு லோகநாயகி கண்ணீர் மல்க நன்றி கூறியுள்ளார்.