
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கியாரா அத்வானி. இவர் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் பிரபல நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு புக்லி என்ற படத்தில் அறிமுகமான நிலையில் தோனி படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது திரையுலகில் அறிமுகமாகி 10 வருடங்கள் ஆன நிலையில் அதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த தொடர்பான வீடியோவை அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் 10 வருடங்கள் ஆனதால் அதை நினைத்து அவர் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram