
ராஜஸ்தான் மாநிலத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் சிபிஎஸ்சி வாரிய தேர்வு நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வாரியத் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 13 வரையும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 2 வரையும் தேர்வு நடைபெறும்.
தேர்வுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் மாணவர்கள் எளிமையாக தேர்வுக்கு தயாராகும் வகையில் முந்தை ஆண்டுகளில் வாரிய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வி வங்கிகளை தயார் செய்ய வேண்டும் என்று கல்வித்துறை, அதிகாரிகள் மற்றும் பள்ளி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம் பள்ளி மாணவர்களுக்கு கூடிய விரைவில் இந்த கேள்வி வங்கிகள் கிடைக்க செய்ய வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த தகவல் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.