கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாநாயக்கன்பாளையத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் யாகவி(17) தனியார் பள்ளியில் ஐ.சி.எஸ்.இ பாட திட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 500 மதிப்பெண்களில் யாகவி 498 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து மாணவி கூறியதாவது, கணிதம், அறிவியல் படங்களை நன்றாக படித்தேன். டியூஷனுக்கு சொல்லாமல் வீட்டில் இருந்தே அன்றாடம் நடத்தும் பாடங்களை அன்றே படித்து விடுவேன். எனக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் உதவியாக இருந்தனர். வரும் காலத்தில் இருதய அறுவை சிகிச்சை மருத்துவராகி சேவை செய்வதையே குறிக்கோளாக கொண்டுள்ளேன் என தெரிவித்தார்.