
அதிமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக மெகா கூட்டணி அமையும் என்று கூறினார். அதன் பிறகு பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பலரும் பேசினார்கள். அந்த வகையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பொதுக்குழு கூட்டத்தில் பேசியதாவது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா இல்லையா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் ஒரு தொண்டராக இருந்து தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நான்கு வருடங்கள் ஜெயலலிதாவை போன்று ஒரு சிறப்பான ஆட்சியை கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த இயக்கம் கடந்த 53 வருடங்களில் பல்வேறு சோதனைகளை எதிரிகளாலும் துரோகிகளாலும் கண்டுள்ளது. நம் மீது ஊடகங்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் தாக்குதல் நடத்தும்நிலையில் அதிமுக பத்திரிகையாளர்களை நம்பி இருக்கவில்லை. அதிமுக என்ற இயக்கம் இரண்டு கோடி தொண்டர்களை நம்பி இருக்கிறது. எங்களுக்குள் கருத்து வேறுபாடும் சலசலப்புகளும் கிடையாது. நமக்குள் சலசலப்புகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இயலாதா என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம் பலம் நமக்கு தெரிகிறதோ இல்லையோ கண்டிப்பாக திமுகவுக்கு தெரியும். எந்த கொம்பன் வந்தாலும் 100 கருணாநிதி வந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாத இயக்கம்தான் அதிமுக.
வங்கதேசத்திலும் இலங்கையிலும் குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. எதிர்க்கட்சியை இருக்கக் கூடாது என்று நினைக்கிற ஸ்டாலினுக்கு மக்கள் பொங்கி எழுந்தால் என்ன நடக்கும் என்பது தெரியும். மக்கள் எழுச்சி அடைந்ததால் தான் சேற்றை அடித்து விரட்டினார்கள். கூட்டணி எப்போது அமையும் என்று பலரும் கேட்கும் நிலையில் 2021 தேர்தலில் 10 நாட்களுக்கு முன்பாக தான் அமைந்தது. அதே போன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நிச்சயம் தேர்தலுக்கு முன்பு கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும். ஸ்டாலினே நமக்கு கூட்டணியை அமைத்துக் கொடுப்பார். மேலும் எப்போதெல்லாம் அதிமுக தோல்வி அடைகிறதோ அதற்கு அடுத்த வருடத்திலேயே மீண்டும் மிகப்பெரிய வெற்றியை பெறும். கண்டிப்பாக 2026 தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆவார் என்று கூறினார்.