மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லால். இவருடைய நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் வருடம் வெளியான படம் லூசிபர். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமானது தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு எல்2 எம்பிரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சுவாரியர், டோமினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.  இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்த படம்  வருகிற 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பிரித்விராஜ் மோகன் லால் கலந்து கொண்டார்கள். அப்பொழுது பேசிய பிரித்விராஜ், இந்த படத்தில் நடிக்க மோகன்லால் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. இது மிகப்பெரிய விஷயம். ஒரு சிலர் மட்டுமே இப்படி இருக்கிறார்கள். அக்ஷய் குமார் அப்படி இருந்திருக்கிறார். நாங்கள் இதுவரை இல்லாத ஒன்றை முயற்சி செய்கிறோம். அதற்கு இப்படியெல்லாம் ஒத்துழைப்பு கிடைத்தால்தான் அது சாத்தியமாகும். 100 கோடி பட்ஜெட்டில் 80 கோடி நடிகர்களுக்கே செலவு செய்வது போல இந்த படத்தை எடுக்கவில்லை. மொத்த செலவும் படத்தை உருவாக்க மட்டுமே உபயோகித்து இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.