சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் 4360 ரூபாய் வரையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 70,160 ரூபாய்க்கும், ஒரு சவரன் 8770 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் நிலையில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி நேற்றைய விலை நீடிக்கிறது. அதன்படி 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 9567 ரூபாய்க்கும், ஒரு சவரன் 76536 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதன்பிறகு வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 110 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 100 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 12080 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி தங்கம் விலை ஒரு கிராம் 7260 ரூபாய்க்கும், ஒரு சவரன் 58080 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில் இன்று ஒரு சவரன் 70,000-ஐ கடந்துவிட்டது. மேலும் வெள்ளி விலையும் இதே போன்று தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது நகை பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.