
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போன்று இன்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை புரிந்தனர். அதாவது எடப்பாடி பழனிச்சாமிக்கு சபாநாயகர் பேச அனுமதி கொடுப்பதில்லை என அவர்கள் கண்டனம் தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்தனர். நேற்று அவர்கள் யார் அந்த தியாகி என்று பேட்ஜ் அணிந்து வந்த நிலையில் நேற்று சட்டசபையில் டாஸ்மாக் ஊழல் பற்றி பேச வேண்டும் என்று கூறினார்.
ஆனால் சபாநாயகர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வெளியேறினர். அதேபோன்று இன்றும் அதிமுகவினர் சட்டசபையை விட்டு வெளியிடப்பு செய்தனர்.
அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தேர்தல் வருவதற்கு முன்பு ஒரு பேச்சு தேர்தல் வந்த பின் ஒரு பேச்சு. கேஸ் சிலிண்டருக்கு நூறு ரூபாய் மானியம் தருவோம் என்று கூறிவிட்டு அதனை இதுவரை நிறைவேற்றவில்லை.
மக்கள் பிரச்சனை பற்றி பேச அனுமதி வழங்கப்படுவது கிடையாது. நாங்கள் வெளியேறிய பிறகு முதல்வரை பேச வைத்து சிறுமைப்படுத்துகிறார்கள். மேலும் இன்னும் 9 மாதங்கள் தான் இருக்கிறது. தற்போது ஆளும் கட்சியாக இருப்பவர்கள் எதிர்க்கட்சியாக மாறும் நேரம் வெகு தொலைவில் இல்லை என்று கூறினார்.