
ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் ரவி தேஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரத்தினகுமாரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழில் ஆடி மாதம் கடைபிடிக்கப்படுவது போன்று ஆந்திராவில் ஆஷாதா மாதம் கடைபிடிக்கப்படுவது வழக்கம். இந்த மாதத்தில் மருமகன் மாமியார் வீட்டிற்கு விருந்திற்கு செல்வார். அந்த வகையில் ரவி தேஜா தன் மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு விருந்திற்கு சென்றார்.
அப்போது அவருக்கு 100 வகையான உணவுகளை சமைத்து மாமியார் அசத்தி இருந்தார். அதில் இனிப்பு காரம் உள்ளிட்ட 100 வகையான உணவுகள் இருந்த நிலையில் அதை அன்போடு அக்கறையோடு மருமகனுக்கு மாமியார் பறிமாறினார். மேலும் இதுகுறித்து ரவி தேஜா கூறும் போது இதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரே இடத்தில் 100 வகையான உணவுகளை பார்ப்பது மிகவும் ஆச்சரியமானது என்று கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.
100 రకాల పిండి వంటలతో అల్లుడికి మర్యాద
ఆషాడం ముగిసిన తర్వాత తొలిసారి ఇంటికి వచ్చిన అల్లుడికి 100 రకాల పిండి వంటలు చేసి పెట్టిన అత్తామామలు
కాకినాడ జిల్లా కిర్లంపూడి మండలం తామరాడ గ్రామానికి చెందిన రత్నకుమారికి కాకినాడకు చెందిన రవితేజకు గత ఏడాది సెప్టెంబర్లో వివాహం జరిగింది.… pic.twitter.com/fNx5Q6KlkC
— Telugu Scribe (@TeluguScribe) August 11, 2024