
ஆப்கானிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் முகமது நபி. இவர் கடந்த 2009 முதல் கிட்டத்தட்ட 15 வருடங்களாக ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி வரும் நிலையில் தற்போது ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதாவது அடுத்த வருடம் சாம்பியன் டிராபி தொடர் நடைபெற உள்ள நிலையில் அந்த போட்டிக்கு பிறகு ஒரு நாள் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். அதேநேரம் டி20 தொடர்களில் தொடர்ந்து விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது. இளம் வீரர்களுக்கு வழி விடும் விதமாக ஓய்வு முடிவை அறிவித்ததாக முகமது நபி கூறியுள்ளார்.
இவருக்கு தற்போது 39 வயது ஆகும் நிலையில் தன்னுடைய ஓய்வு முடிவை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார். இதனை அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இவர் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதோடு 3000 ரன்கள் மட்டும் 100 முதல் ஆப்கன் வீரர் என்ற பெருமையும் இவரை சேரும். அதோடு அணிக்காக தொடர்ந்து 100 சர்வதேச போட்டிகளில் விளையாடிய 16 சர்வதேச வீரர்களில் முகமது நபியும் ஒருவர். மேலும் இவர் தற்போது ஓய்வு முடிவை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.