செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி,  டிசம்பர் 6ஆம் தேதி  மது ஒழிப்பு மகளிர் கிராம சபை கூட்டம் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நடத்துகின்றோம். இந்த கூட்டத்தின் நோக்கமே தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆச்சு என்பது தான்.  இவர்கள் நீட் தேர்வு  விலக்கு கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். முதலில் மது விலக்கு, பிறகு நீட் தேர்வு விலக்கு போகலாம் என்பது தான் என்னுடைய கேள்வி.

திருநெல்வேலியில்….புதுக்கோட்டையில்…  நாங்குநேரியில் சம்பவம் நடக்கும் போது 100 இளைஞர் கூட தேவர் சமுதாயத்தில்…  மறவர் சமுதாயத்தில் சமூக பற்றோடு கிடையாதா ?நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து அவர்களே ஆர்ப்பாட்டம் செய்தால் என்ன ? எது தடுக்கிறது ?  அப்போ கொஞ்சம் கூட தன்னுணர்வு அவர்களிடம் கிடையாதா ?

கோலாலம்பூர்  மலேசியா போய்…. ஒரு தவறு செய்தால்,  அவர்களுக்கு தண்டனை கிடைத்தால்…  தமிழர்களுக்கு பாதிப்பு என்று எல்லாரும் குரல் கொடுக்கிறோம். அங்கு ஜாதியை மறைச்சிருந்தாங்க.   அங்கே போனால் தமிழர்கள் ஆகி விடுகிறார். அப்போ ஏன் வெளியே வர மாட்டேங்குறாங்க? அப்படி எந்த இளைஞராவது ஜாதியில் இருந்து  வெளியில் வந்து….

அந்த சாதியில்  தவறு செய்தவர்களை எதிர்த்து போராட வந்தால்,  யார் கரம் சேர்கின்றார்களோ, இல்லையோ புதிய தமிழகம் கட்சி நாங்கள் வந்து அவர்களோடு சேர்ந்து பயணிப்போம். அதனை நான் ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன் என தெரிவித்தார்.