
உடைந்த சிறு மர துண்டை போல இருக்கும் பூச்சியின் புகைப்படம் நமது கண்களை ஏமாற்றியுள்ளது. முதலில் பார்க்கும் போது ஏதோ ஒரு மரத்துண்டு இருப்பதாக அனைவரும் நினைத்திருப்போம். பிறகு பார்க்கும்போது தான் தெரிகிறது அது மரத்துண்டு இல்லை.
அது ஒரு பூச்சி என்பது. மரத்துண்டு போல இருக்கும் பூச்சியின் வீடியோவை பார்த்த பலரும் கடவுளின் படைப்பு உண்மையாகவே வியப்பை ஏற்படுத்துவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.