
மக்களிடையே மின்சாரம் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தெலுங்கானா அரசின் புதிய அறிவிப்பு கடந்த 18ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. மக்களை ஈர்க்கும் விதமாக 100% சாலை வரி மற்றும் பதிவு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள், மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷா, மின்சாரத்தில் இயங்கும் இலக ரக சரக்கு வாகனங்கள், வணிக வாகனங்கள், டிராக்டர் மட்டும் பேருந்துகளுக்கு பொருந்தும்.
இந்த திட்டம் வருகிற 2026 ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை வழங்கப்படும். அதாவது இந்த தேதிக்குள் தெலுங்கானாவில் வாங்கப்படும் மற்றும் பதிவு செய்யப்படும் அனைத்து ரக மின்சார வாகனங்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். தெலுங்கானா அரசு போக்குவரத்து கழகத்திற்காக வாங்கப்படும் பேருந்துகளுக்கு மட்டும் வாழ்நாள் வரி கட்டண விளக்கு அமலில் இருக்கும் என்று அந்த அறிவிப்பில் இருந்தது.