
இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆன்லைன் மூலமாகவே பணப்பரிவர்த்தனை செய்து வருகிறார்கள். ஒரு இடத்தில் இருந்து கொண்டு மற்றவருக்கு எளிதாக பணத்தை அனுப்ப முடியும். இந்த நிலையில் 2024 ஆம் வருடம் ஆரம்பித்திருக்கும் நிலையில் மத்திய அரசு ஆன்லைனில் பணம் செலுத்துபவர்களுக்கு புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய விதி மூலம் ஒரே நேரத்தில் 5 லட்சம் வரை பணம் அனுப்பலாம். இந்த வசதியை இந்திய ரிசர்வ் வங்கியோடு இணைந்து நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.
மேலும் இந்த புதிய வசதியானது மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய நிறுவனங்கள் பணம் செலுத்துவதற்கு மட்டுமே பொருந்தும். இந்த வசதி ஜனவரி 10ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல ஒரு வருடத்திற்கு மேல் பயன்படுத்தாமல் இருக்கும் ஐடிகளை முடக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.