
தமிழக முதல்வர் ஸ்டாலின் என்றும் மகளிர் தினத்தை முன்னிட்டு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 எப்போது வழங்கப்படும் என்ற தேதியை தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. வருகின்ற 24-ஆம் தேதி பட்ஜெட் தாக்களின் போது அந்த அறிவிப்பு வரும். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்ததுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற உடன் முதலில் மகளிர் காண இலவச பேருந்து திட்டத்தில் கையெழுத்திட்டது.
அதன் பிறகு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உயர்கல்வி செல்வதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது. மகளிர் பேருகால விடுப்பு சம்பளத்துடன் 12 மாதங்களாக உயர்ந்தது. இதனையடுத்து அரசு பணியிடங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மேலும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, மாநகராட்சியில் பெண்களுக்கு 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு என பெண்களுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.