
பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, எல்லா பெண்களுக்கும் மாதம் 1000 ரூபாய். இப்ப அதுல என்ன தகுதி வாய்ந்த தாய்மார்கள் ? அப்ப தகுதிக்கு என்ன பெயர் வைத்திருக்கிறாய்? ஒரு பெண் என்பதற்கு என்ன தகுதி இருக்கணுமோ, அது எல்லா பொண்ணுக்கும் இருக்கு இல்ல. அது என்ன தகுதி வாய்ந்த தாய்மார்கள் ?
இவன் 1967 அதைத்தான் பண்ணினான். ரூபாய்க்கு மூணு படி அரிசி போடுவோம் என சொன்னான். அப்போ காரைக்குடிக்கு வந்த பக்தவச்சலம் சொன்னாரு…. முதல் உழவு செய்ய இவ்வளவு ரூபாய் ஆகும். அடி உரம் போட இவ்வளவு ரூபாய் ஆகும். மேல் உழவுக்கு இவ்வளவு ரூபாய், அப்புறம் நாத்து போட இவ்வளவு ரூபாய், பிறகு நாத்து பறிக்க இவ்வளவு ரூபாய், நாத்து நடுவதற்கு இவ்வளவு ரூபாய் ஆகும், மேல் உரம் போட இவ்வளவு ரூபாய் ஆகும்.
களை எடுக்க இவ்வளவு, அறுவடைக்கு இவ்வளவு, அப்ப ஒரு மூட்டை அரிசி நெல் உற்பத்தி பண்ண இவ்வளவு சொன்னா….. உற்பத்தி செலவு இவ்வளவு வருது… எப்படி மூன்று ரூபாய்க்கு மூணு படி அரிசி கொடுக்க முடியும் என்று கேட்டாரு…. அடேங்கப்பா…! இந்த பேச்சுல மட்டும் இந்த திராவிடத்தை ஜெயிக்கிறதுக்கு முடியாது.
உடனே மறுநாள் அண்ணாதுரை வந்தார், அண்ணாதுரை வந்து என்ன சொன்னாரு ? எனக்கு திருமணம் செய்து வையுங்கள்( நான் அண்ணாதுரை சொன்னது சொல்றேன், நீங்க என்ன தப்பா நினைக்க கூடாது ) எனக்கு திருமணம் செய்து வையுங்கள்…. பத்து மாதத்திலேயே அழகிய ஆண்மகனை பெற்று தருகிறேன் என்று சொன்னால், பெரியவர் பக்தவச்சலம் எனக்கு திருமணமே செய்து வைக்காமல் குழந்தை பெக்க முடியாது இவனால் என்று சொல்கிறார்.